சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கும்   பிரபல தொழிலதிபர் விசாகனுக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது.

பழைய வாழ்க்கையை மறந்து, மகன் வேத் மற்றும் கணவர் விசாகனுடன் புதிய வாழ்க்கையை துவங்கியுள்ளார் சௌந்தர்யா.

இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து தன்னுடைய குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக செல்வதை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். 

இந்த புகைப்படத்தில் சௌந்தர்யாவின் மகன் வேத், விசாகனுடைய காலில் ஏறி விளையாடும் குறும்பு தனத்தை வெளியிட்டுள்ளார். 

 

 

மேலும் இதில் 'இதுதான் கடவுளின் ஆசிர்வாதம், வரம் என்றும் இருவரும் எனது உயிர்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.  இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.