கல்கியின் வரலாற்று காவியங்களில் ஒன்றான 'பொன்னியின் செல்வன்' கதையை படமாக்க, இயக்குனர் மணிரத்னம் முழு வீச்சில் இறங்கியுள்ளார்.  இந்த படம் குறித்து அடுத்தடுத்து பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. 

கல்கியின் வரலாற்று காவியங்களில் ஒன்றான 'பொன்னியின் செல்வன்' கதையை படமாக்க, இயக்குனர் மணிரத்னம் முழு வீச்சில் இறங்கியுள்ளார். இந்த படம் குறித்து அடுத்தடுத்து பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதுவரை வெளியாகியுள்ள தகவலின் படி, வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக கீர்த்தி சுரேஷ், பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்ததியாக ஐஸ்வர்யாராய், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன்' நாவலை வெப் சீரீஸாக எடுக்க தயாராகி வருகிறார், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் செளந்தர்யா. உலக அளவில் பிரபலமான எம்.எக்ஸ் பிளேயர் என்ற நிறுவனத்துடன் இணைந்து வெப் சீரிஸ் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் செளந்தர்யா ரஜினிகாந்த் தற்போது இதுகுறித்த பணிகளை தொடங்கிவிட்டதாகவும், இதுகுறித்த அப்டேட்டுக்களை அவ்வப்போது வெளியிடவுள்ளதாகவும் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளார்.

இதில் இருந்து இந்த படத்தை படமாக எடுக்க இருந்த மணிரத்னத்தை, முந்தி கொண்டு 'வெப் சீரிஸ்' பணியில் தீவிரம் காட்டி வருகிறார் சௌந்தர்யா. இதற்கு பல ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Scroll to load tweet…