நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவின் முதல் திருமணம் விவகாரத்தில் முடிந்தையடுத்து, தற்போது தொழிலதிபர் விசாகனை இரண்டாவது திருமணம் செய்கிறார்.  இவர்களது திருமணம் வருகிற 11ல், சென்னையில் நடக்க உள்ள நிலையில் இன்று வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா. இவருக்கு, அஸ்வின் என்பவர் உடன் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில், கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். தற்போது சவுந்தர்யா, தொழிலதிபர் விசாகனை மறுமணம் செய்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவர்களது, திருமணம் வரும்11ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் வரவேற்பு நடந்தது.

இதில் இருவீட்டாரது நண்பர்கள் மற்றும் நெருங்கிய சினிமா பிரபலங்கள் இந்த நிகழ்சசியில் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் விதை பந்துகள் வழங்கப்பட்டன. 

இதனைத் தொடர்ந்து வரும்11ம் தேதி, சென்னை லீலா பேலஸில் காலை 9.00 முதல் 10.30 முகூர்த்தத்தில் திருமணம் நடக்கிறது. இதில் இருவீட்டாரது நெருங்கி உறவினர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள்.

அன்று இரவு 8.30 மணியளவில் மற்றுமொரு வரவேற்பு நிகழ்ச்சியில், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர்.