சன் லைப் தொலைக்காட்சி தற்போது புது பொலிவுடன் ஜொலிக்கிறது என்று பார்த்தால், அதில் வரக்கூடிய  நிகழ்சிகளும் மிகவும் பொலிவுடன் இருக்க வேண்டும் என்பதற்காக சொப்பன சுந்தரி என்ற  நிகழ்ச்சியை  ஒளிபரப்பி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் உச்சக்கட்ட ஒரு காட்சி இடம்பெற்று உள்ளது. அதாவது மார்பகங்களை தர்பூசணி வைத்து மறைத்துக்கொண்டு காட்சி தருகிறார் போட்டியாளர் ஒருவர். மாடல் அழகிகளுக்கு மென்டராக நடிகைகள் பார்வதி நாயர், சாக்ஷி அகர்வால் பங்கேற்று உள்ளனர்.

சொப்பன சுந்தரி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உள்ள போட்டியாளர்கள் பழங்கள் மற்றும் உணவு பொருட்களை வைத்து தங்களால் எந்த அளவிற்கு அழகாக தோற்றமளிக்க முடியுமா அந்த அளவிற்கு  உச்சக்கட்டமாக செயல்பட்டு உள்ளனர்.

 

தமிழ்நாடு என்றாலே தமிழர்களின் கலாச்சாரம் தான் நம் மனதில் வந்து நிற்கும். தமிழர்களின் கலாச்சாரம்   உலக அளவில் பெரிதும் பேசக்கூடிய ஒரு விஷயம். ஆனால் இன்று விஜய் டிவி மற்றும் சன் டிவி இடையே  நடக்கும் நிகழ்ச்சிக்கான போட்டியில் வரைமுறை இன்றி சென்று கொண்டிருக்கிறது கலாச்சார சீர்கேடு.
தொலைகாட்சிகளின் டிஆர்பி ரேட் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, சொப்பன சுந்தரி போன்ற  நிகழ்ச்சியில் ஆபாசத்தின் உச்சமாக, தமிழ் பெண்ணான பவித்ரா என்பவர், தர்பூசணியை வைத்து போஸ் கொடுத்து உள்ளார். இதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து, மக்கள் அதனை வைரலாக பார்த்து வருகின்றனர்.

இருந்த போதிலும், இதை விட மோசமாக ஒரு பெண் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள முடியாது என்ற  பொருளில் பெரும்பாலோனர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சபரிமலைக்கு சென்றே தீருவேன் என்று  ரெஹானா பாத்திமா என்ற பெண் முயற்சி மேற்கொண்ட விஷயமும், அவரை ஐயப்பன் சன்னதியை அடைய விடாமல் திருப்பி அனுப்பியதும் தெரிந்த ஒன்றே...

பின்னர் அவரை பற்றி அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் தோண்டி பார்க்கும் போது அவர் ஒரு மாடல் என்பதும், இதற்கு முன்னதாக உடல் அழகை முழுவதுமாக காண்பிக்கும் அளவிற்கு விதவிதமாக போட்டோ எடுத்துள்ள செய்தியும் அனைவரும் அறிந்ததே.

அதில், ஒரு போட்டோவில் தர்பூசணி பழத்தை வைத்து தனது மார்பகங்களை மறைப்பது போன்ற போட்டோ அனைவரும் பார்த்ததே.. இதனை பார்த்த மக்கள் பெரும் கோபத்துடன் அந்த பெண்ணை திட்டி தீர்த்தனர். ஆனால் அதை  விட மோசமாய் ஒரு தமிழ் பெண் அதுவும் டிவி நிகழ்ச்சியில் கோடான கோடி மக்கள்  பார்வையை தன் மீது விழ வைக்க வேண்டும் என்பதற்காகவும், தொலைக்காட்சியில் டிஆர்பி  ரேட் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் இப்படி ஒரு கலாச்சார  சீர்கேடு வழிவகுக்கும் நிகழ்ச்சியை நடத்துகின்றது என்றால் என்ன சொல்வது என்று யாருக்குமே தெரியாத நிலைதான்.....

இதில் வேறு ஒரு கொடுமை என்னவென்றால், இதுநாள் வரை தரமான கதாபாத்திரத்தில் நடித்தும், மக்கள் மத்தியில் சிறந்த ஹீரோ என்ற பெருமையையும், சிரிப்பழகி சிநேகாவின் கணவருமான பிரசன்னா தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இவருக்கு வேறு எந்த நிகழ்ச்சியும் கிடைக்கவில்லையா ? என்று  விமர்சனம் எழுந்து உள்ளது.

இந்த நிகழ்ச்சியின் பிரோமோவை பார்க்கும் போது ஆபாச படம் பார்த்த பீல் கிடைத்து விடுகிறது என்றே பெரும்பாலோனோர கருத்து தெரிவித்து உள்ளனர்.