சமீப காலமாக இரண்டு முறை, செல்ஃபி சர்ச்சையில் சிக்கியவர் பழம்பெரும் நடிகர் சிவகுமார். கடந்த மூன்று மாதத்திற்கு முன், மதுரையில் நடந்த கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட இவரிடம் இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றபோது, சிவகுமார் அவருடைய செல் போனை ஆக்ரோஷமாக தள்ளி விட்டார். 

இந்த சம்பவத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இதை தொடர்ந்து... வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னுடைய மன்னிப்பை தெரிவித்திருந்தது, அந்த இளைஞருக்கு புது போன் ஒன்றையும் வாங்கி கொடுத்தார்.

இதை தொடர்ந்து சமீபத்தில் ஒரு விழாவின் போது, மீண்டும் சிவகுமார் செல்போனை தட்டி விட்ட சம்பவம், சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து விளக்கம் அளித்த நடிகரும், சிவகுமாரின் மகனுமான கார்த்தி. ஒருவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் போது அவருடைய அனுமதி பெற்று எடுப்பதே நாகரீகம் என, அப்பா செய்ததற்கு நியாயம் சொன்னார்.     

மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட ஒரு இசை வெளீயிட்டு விழாவில் நடிகை கஸ்தூரிக்கும் இதே அறிவுரையை கார்த்தி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தளபதி விஜய்யின் பெற்றோர்களான எஸ்.ஏ.சந்திரசேகர்-ஷோபா ஆகியோருடன், நடிகர் சூர்யா எடுத்த செல்பி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து நெட்டிசன்கள் பலர் அனுமதி கேட்டு எடுக்கப்பட்ட செல்ஃபியா இது?  என கலாய்த்து வருகிறார்கள்.