நடிகர் சூர்யா நடிப்பில், விரைவில் ரிலீசாக உள்ள திரைப்படம் 'சூரரைப் போற்று'. இந்த படத்தை 'இறுதிச்சுற்று' படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்த, பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு நடிகர் ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்துள்ளார்.  2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், ஷிகியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தற்போது இரண்டாவது லுக் நியூ இயர் கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

இதில் ஒரு குருவி... அதில் நடிகர் சோர்வாவின் முகம், பருந்தாகுது ஊர்க்குருவி வணங்காதது என் பிறவி... போன்ற வார்த்தைகள் நிரம்பியுள்ளது. பார்பதற்க்கே செகண்ட் லுக் மிகவும் வித்தியாசமாக உள்ளது. எனவே ரசிகர்கள் பலர், இதில் என்ன சீக்ரெட் ஒளிந்துள்ளது என கேள்வி எழுப்பி வருவது மட்டும் இன்றி, அதனை கண்டு பிடிப்பதிலும் ஆவர் காட்டி வருகிறார்கள்.

 

மேலும் டீஸர் ஜனவரி 7ஆம் தேதி வெளியாகும் என்கிற தகவலையும் படக்குழுவினர் செகண்ட் லுக் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.