இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா தயாரித்து, நடித்து முடித்துள்ள திரைப்படம் 'சூரரைப்போற்று'. தீபாவளியை முன்னிட்டு நேற்று (நவம்பர் 12 ) ஆம் தேதி,  ஓடிடி தலத்தில் வெளியானது. இந்த படத்தை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை தொடர்ந்து நல்ல கருத்தை தெரிவித்து வரும் நிலையில், படக்குழு அதிர்ச்சியாகும் சம்பவமும் நடந்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கொரோனா பிரச்சனையால், முன்னரே வெளியாக இருந்த படங்கள் கூட, தீபாவளி ரிலீசாக மாறியுள்ளது. அந்த வகையில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூர்யாவின் , 'சூரரை போற்று' திரைப்படமும் ஒன்று இந்தப்படம் ஓடிடி தளத்தில் நவம்பர் 12 ஆம் தேதி அதாவது நேற்று வெளியானது.

இந்த படத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் வெளியான மாறா, வெய்யோன் சில்லி, ஆகிய பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் படத்திற்கும் தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. சூர்யா மாறா என்கிற கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடித்துள்ளதாக பல பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இந்த எச்டி பிரிண்ட் தரத்திற்கு, சமூக வலைத்தளத்தில் வெளியாகி, படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெரிப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.