“இறுதிச்சுற்று” படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் , “சூரரைப்போற்று”. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

இதையும் படிங்க: தஞ்சாவூர் ஆண்களை அவமதித்த வனிதா... சொந்த ஊர்காரங்கள தப்பா பேசவில்லை என அதிரடி விளக்கம்...!

கொரோனா பிரச்சனையால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால்  “சூரரைப்போற்று” படத்தில் சொச்சம், மிச்சம் இருந்த அந்த பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் கொடுக்கப்பட்டதை அடுத்து, ஓடிடி தளத்தில் 55 கோடி ரூபாய் வரை கொடுத்த படத்தை வாங்க தயாராக உள்ளனர். 

 

இதையும் படிங்க: சட்டை பட்டன்களை கழட்டிவிட்டு செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்த பிரபல தொகுப்பாளினி டி.டி... வைரல் கிளிக்ஸ்...!!

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.

 

இதையும் படிங்க: உடலை விட்டு நழுவும் வழு வழு உடையில் அமலா பால்... அதிரடி கவர்ச்சியுடன் அம்மணி சொன்ன வாழ்க்கை தத்துவம்...!

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று  “காட்டு பயலே” என்கிற பாடலின் ஒரு நிமிட வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் இன்று பாடலின் முழு லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.  பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே 3 மில்லியனை தாண்டியுள்ளது சூர்யா ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.