காப்பான் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, "சூரரைப் போற்று"படத்தில் நடித்து வருகிறார். "இறுதிச்சுற்று" படப்புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில், சூர்யா வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார்.
 
சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். சூர்யாவே தயாரித்து நடிக்கும் இந்தப்படத்துக்கு ஜி.பி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

நீண்ட நாட்களாக படத்தின் அப்டேட் வெளியாகாததால், தீபாவளிக்காவது ஏதாவது அறிவிப்பு வருமா? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புடன்  ரசிகர்கள் காத்திருந்தனர். 
அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக, தீபாவளி அன்று சூரரைப் போற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. 

வரும் நவம்பர் 10-ம் தேதி சூரரைப் போற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.