உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தற்போது அணைத்து படங்களின் படப்பிடிப்பும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கும், சீரியல் பணிகளுக்கும் மட்டுமே அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், சூரரை போற்று படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தற்போது அணைத்து படங்களின் படப்பிடிப்பும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கும், சீரியல் பணிகளுக்கும் மட்டுமே அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், சூரரை போற்று படம் குறித்து வெளியாகியுள்ள தகவல் தற்போது, கோலிவுட் திரையுலகத்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சமீபத்தில் தான் நடிகர் சூர்யா, தயாரிப்பில் ஜோதிகா நடித்திருந்த 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகி, பெண்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்றது.

இதை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா சூரரை போற்று படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்... இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்து விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பணிகள் நிறுத்தப்பட்டது அனைவரும் அறிந்தது தான்.

அரசு தரப்பில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அனுமதி அளித்ததால், அந்த பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளது. எனவே மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என்று தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த திரைப்படம் சென்சாரில் ’யு’ சான்றிதழ் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ’சூரரைப்போற்று’ திரைப்படம் திரையிடுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கோலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட கோரி ரூபாய் 55 கோடி வரை கேட்டும், சூர்யா தன்னுடைய ரசிகர்கள் இந்த படத்தை திரையரங்கில் தான் பார்க்க வேண்டும் என கூறி கறாராக மறுத்து விட்டாராம். காரணம் இந்த படத்தின் கதை மீது அவர் வைத்துக்கும் நம்பிக்கை என்றே கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாக தொடர் தோல்வி படங்களை கொடுத்து வரும் சூர்யாவுக்கு இந்த படம் சூப்பர் ஹிட்டாக அமையும் என்கிற நம்பிக்கையை கொடுத்துள்ளது இந்த படத்தின் கதை. எனவே விஜய் எப்படி மாஸ்டர் படத்தின் வெளியீட்டுக்கு காத்திருக்கிறாரோ... அதே வழியை பின்பற்றுகிறார் சூர்யா.