நடிகர் சூர்யா, இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள,  ’சூரரைப்போற்று’ திரைப்படத்தை, ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறி, அதிர்ச்சி கொடுத்தார். அதன்படி இந்த படம், வரும் அக்டோபர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு ஒரு சிலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வந்தாலும், வழக்கம் போல் சிலர் பலர் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான  பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கூடுதலாக இந்த் படத்தில் சில பாடல்கள் இணைக்க உள்ளதாக இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அறிவித்திருந்தார். 

அதன்படி தற்போது மேலும் 3 அற்புதமான பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளதாக சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் ஜி.வி. இந்த பாடல்கள் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் முறைப்படி அறிவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைத்துள்ளனர்.

இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக, மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ளனர். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.