பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் முன்னாள் மேனேஜரான திஷா சாலியன்,மும்பை மலாட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். அப்போது அவருடைய வருங்கால கணவரும் உடன் இருந்தார். இதையடுத்து பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த சுஷாந்த், மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இருவரது தற்கொலைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ? என பேச்சு அடிபட ஆரம்பித்தது. 

 

இதையும் படிங்க: “விஷால் ஏமாற்றியதை ஆதாரத்துடன் வெளியிடுவேன்”... மோசடி புகாரில் சிக்கிய பெண் கணக்காளர் அதிரடி...!

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட திஷா சாலியன் வயிற்றில் நடிகர் சூரஜின் குழந்தை வளர்ந்து வந்ததாகவும்,  அவரை சுஷாந்த் பாதுகாத்ததால் கூறப்படுகிறது. மேலும் சூரஜ் பஞ்சோலி திஷாவை ஏமாற்றியதால் தான் அவரை தற்கொலை செய்து கொண்டார் என்றும், திஷா கர்ப்பமாக இருந்த விவகாரத்தை சுஷாந்த் தக்க சமயத்தில் அம்பலப்படுத்தவிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் சூரஜ் டார்ச்சர் கொடுத்து சுஷாந்தை தற்கொலைக்கு தள்ளியதாகவும் பேச்சு அடிபடுகிறது. மேலும் சுரஜிக்கு ஆதரவாக சல்மான் கான் செயல்படுவதாகவும் வதந்தி பரவியது. 

 

இதையும் படிங்க: ஒரே ஒரு போன் கால்.... வெளவெளத்து போன ரஜினிகாந்த்... இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவித்த கதை தெரியுமா?

இப்படி அடுத்தடுத்து பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் சூரஜ் விளக்கமளித்துள்ளார். அதில் தனக்கும், சுஷாந்திற்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும், என் வாழ்க்கையில் தலையிட சல்மான் கான் யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தான் திஷாவை பார்த்ததே இல்லை என்று கூறியுள்ள சூரஜ், சுஷாந்த் தற்கொலைக்கு பிறகே திஷா பற்றி தெரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். இவருடைய விளக்கத்தை அடுத்தாவது தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.