Asianet News TamilAsianet News Tamil

வயிற்றில் குழந்தையோடு கணவரை தேடி அலையும் சோனியா அகர்வால்!

தமிழில் "காதல் கொண்டேன்" படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். முதல் படமே ஆஹா.. ஓஹோ... என ஓடியதால், இந்த படத்தை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் குவிந்தது.

soniya agarwal acting in heroine based movie
Author
Chennai, First Published Dec 18, 2018, 12:33 PM IST

தமிழில் "காதல் கொண்டேன்" படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். முதல் படமே ஆஹா.. ஓஹோ... என ஓடியதால், இந்த படத்தை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் குவிந்தது.

இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த, 7ஜி ரெயின்போ காலனி,  கோவில், திருட்டுப் பயலே, மதுர, உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தார். 

soniya agarwal acting in heroine based movie

இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்ட பின் திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்த இவர், அவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின் மீண்டு நடிக்க துவங்கினார். ஆனால் குணச்சித்திர வேடங்கள் மட்டுமே கிடைத்தது. சில இயக்குனர்கள் இவரை கதாநாயகிக்கு அம்மா வேடத்தில் நடக்க அழைக்க, ஒரேயடியாக வெள்ளித்திரையில் இருந்து விலகி சின்னத்திரை நாயகியாக மாறினார்.

நாணல், மல்லி, அச்சம்தவிர் போன்ற சீரியல்களில் நாயகியாக நடித்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் வெள்ளித்திரையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார்  நடிகை சோனியா அகர்வால்.

soniya agarwal acting in heroine based movie

கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த கஹானி படத்தைப்போல் இந்த திரைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது. எப்படி நடிகை வித்யா பாலன் காணாமல் போன கணவனே தேடி அலைவதுபோல் இந்த கதை உருவாக்கப்பட்டிருக்கும்.  இதேபோல் ஒரு கர்ப்பிணி பெண் தன்னுடைய கணவரை தேடி அலையும் கதையில் நடிகை சோனியா அகர்வால் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் கதை இலங்கையில் இறுதிப்போர் நடந்த போது இந்தியாவிற்கு தப்பிவந்த தன் கணவனைத் தேடி இலங்கையைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் வருவது போன்ற கதை கணவனைத் தேடும் முயற்சியில் அகர்வாலுக்கு கிடைக்கும் அனுபவங்களை படமாக இயக்கியுள்ளார் இயக்குனர். இந்த திரைப்படம் ராமேஸ்வரம் சிங்கப்பூர் மலேசியா ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

நடிகை வித்தியாபாலன் இந்தியில் நடித்த கஹானி திரைப்படம்  சூப்பர் ஹிட் ஆகி இருந்தாலும்,  இதே கதையை சேகர் கம்முலா என்பவர் நடிகை நயன்தாராவை வைத்து தெலுங்கில் அனாமிகா, என்ற பெயரிலும் தமிழில்  'நீ எங்கே' என்ற பெயரிலும்  ரீமேக்  சித்திருந்தார். ஆனால் இந்த திரைப்படம்  இந்தியில் வெற்றி பெற்ற அளவிற்கு தெலுங்கிலும் தமிழிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios