அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது படம் ஆகும்.

அஜித் கடைசியாக நடித்த வேதாளம் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்திருத்தார், அதேபோல் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் அஜித்57 படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார் .

இவர் இன்று ரெமோ படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்க்க வந்தார், அப்படி வருகையில் தல-57 குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்குபதில் அளித்த அவர் ‘இந்த படத்தில் ஆலுமா டோலுமா பாடல் போல் இருக்குமா என்று தற்போது சொல்ல முடியாது, மேலும், அந்த பாடல் ப்ளான் செய்து ஹிட் அடிக்கவில்லை.

அதே மாதிரி இந்த படத்திலும் பாடல்களுக்காக மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து வருகிறோம், நீங்களே கேட்டு சொல்லுங்கள்’ என கூறியுள்ளார்.