நடிகைகள் எப்போதுமே தாங்கள் பயன்படுத்தும், உடைகள் முதல் மேக்கப் வரை வித்தியாசமாக இருக்க வேண்டும் என எண்ணுவார்கள். இப்படி இவர்கள் அணியும் உடைகள் சில சமயங்களில் சர்ச்சையை கூட கிளப்பியுள்ளது.

இதோ போல் தற்போது பாலிவுட் நடிகை சோனம் கபூர், தான் நடித்துள்ள படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்த படத்தின் பெயர் " ஏக் லடிக்கி கோ தேகா தொ ஏசா லகா" , அவருடைய பெயர் மற்றும் மாஸபா ஆகிய வார்த்தைகளை தமிழில் எழுதப்பட்ட புடவை ஒன்றை கட்டி வந்தார்.

இது பார்ப்பவர்களையே பிரமிக்க வைத்தது, மேலும் தற்போது இந்த புடவையின் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த புடவை 22  ஆயிரம் ரூபாயாம். படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சோனம் கபூர் பிரத்தியேகமாக ஆர்டர் கொடுத்து இந்த புடவையை உருவாக்கியுள்ளார்.

தொடர்ந்து நடிகைகள் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் இவர் தமிழ் மொழி எழுத்துக்கள் கொண்ட புடவை அணிந்து வந்திருந்தது பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

 

 

"Ek ladki Ko Dekhs Toh Aisa Laga " படத்தில், அனில் கபூர், ஜூஹி சாவ்லா, ஆகியோரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.