இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘பம்பாய்’ படத்தில் ‘ஹம்ம ஹம்மா’ என்ற பாடலுக்கு நடனமாடி தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவர், நடிகை சோனாலி பிந்திரே. 

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘பம்பாய்’ படத்தில் ‘ஹம்ம ஹம்மா’ என்ற பாடலுக்கு நடனமாடி தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவர், நடிகை சோனாலி பிந்திரே. 

மேலும் இவர், தமிழில் நடிகர் குணால் நடிப்பில், வெளியான 'காதலர் தினம், அர்ஜுன் நடித்த 'கண்னோடு காண்பதெல்லாம் போன்ற படங்களில் நடித்து மேலும் பிரபலமானார்.

தமிழ் மற்றும் இன்றி, பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார். திருமணத்திற்கு பின் கணவர், குழந்தை என குடும்பத்தை கவனித்து கொண்டு வந்த இவர் , கடந்த இரண்டு மாதத்திற்கு முன் தான் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, ட்விட்டர் மூலம் ரசிகர்களிடம் தெரிவித்தார்.

சாதாரண முதுகு வலிக்காக மருத்துவமனை சென்ற போது, இந்த அதிர்ச்சி தகவலை மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறியிருந்தார் சோனாலி. மேலும் தற்போது புற்று நோய்க்கு அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வருகிறார், அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிட்டு தான் நலமுடன் இருப்பதாக ரசிகர்களுக்கு கூறி வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு கேன்சர் சிகிச்சையால் ஏற்பட்டுள்ள பின் விளைவு ரசிகர்களை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கேன்சர் நோயில் இருந்து விடுபட தற்போது இவருக்கு கிமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இந்த சிகிச்சையின் விளைவாக இவருடைய கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் சோனாலி. 

View post on Instagram

தவறாமல் புத்தகம் படிப்பதை பழக்கமாக கொண்டுள்ள அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் கிமோதெரபியால் தன் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் சரியாக படிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் தற்போது நிலைமை சரியாகி வருவதாக தெரிவித்துள்ளார்.