நடிகைகள் பலரும் விருது விழா,  சினிமா விழாக்கள் மற்றும் போட்டோ ஷூட் ஆகியவற்றில் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களை கவரும் யுக்தியை கையாண்டு வருகிறார்கள். 

அதிலும் பாலிவுட் நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டாம்... கவர்ச்சிக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல், உடை அணிகிறார்கள்.

ஆனால் நடிகைகள் இதுபோல் உடை அணிந்தால் திரைப்படங்களில் ரசிக்கும் ரசிகர்கள்,  வெளியுலகிலும் இது போன்ற ஆபாச உடைகள் அணிவதை  ஊக்குவிப்பதில்லை. மாறாக தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகை, சோனாக்ஷி சின்ஹா...  மிகவும் கவர்ச்சியான உடையை அணிந்து வந்தது ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது. எனவே இவரின் உடையை பற்றி பலர் தொடர்ந்து தங்களுடைய விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.

சோனாக்ஷி சின்ஹா, தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா'  படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகைகள் கவர்ச்சி உடை அணிந்து விழாக்களில் கலந்து கொள்ளும் பழக்கம் மெல்ல மெல்ல கோலிவுட் திரையுலகிலும் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.