* நடிகர் கமல் நாளுக்கு நாள் வெட்டி பேச்சு பேசுகிறார். இதை மக்கள் பொருட்படுத்தக் கூடாது. பார்ட் டைம் ஆக பாலிடிக்ஸ் செய்து வரும் அவருக்கு மக்கள் நலன் மீது எந்த அக்கறையுமில்லை. - பாஸ்கரன் (தமிழக கதர் துறை  அமைச்சர்)

* அ.ம.மு.க.விலிருந்து இன்று நம் கட்சியில் இணைந்துள்ள பரணி கார்த்திகேயன், தேர்தல் பணிகளை செய்வதில் கில்லாடி என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைந்தேன்.- ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)

* தமிழிசை இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழகத்தில் தொடர்ந்து பாரதிய ஜனதா வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பிரதமர் மோடியின் செல்வாக்கினால் தமிழகத்தில் தாமரை மிகப்பெரிய விஸ்வரூபமெடுக்கும். -வானதி சீனிவாசன் (பா.ஜ. மாநில பொதுச்செயலாளர்)

* தமிழகத்தில் அ.தி.மு.க.வின் ஆட்சிதான் நடக்கிறது. இதில் பா.ஜ.க.வின் பங்களிப்பு எங்கே இருக்கிறது. ஆனால் எதிர்கட்சிகள்தான் அடிப்படையே இல்லாமல், நடப்பது டெல்லி ஆட்சி! நாங்கள் மத்திய அரசுக்கு பணிந்து ஆட்சி நடத்துகிறோம்! என்றெல்லாம் கிளப்பிவிடுகின்றனர். -செல்லூர் ராஜூ (தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர்)

* பார்லிமெண்டில் பெண்அளுக்கு இட ஒதுக்கீடு அளீப்பது, தீர்வுக்கான ஒரு சிறிய அம்சமே. உண்மையான பாலின சமநிலை என்பது அடிமட்டத்திலிருந்து வரவேண்டும். பார்லிமெண்டில் மட்டும் இட ஒதுக்கீடு கிடைத்தால் போதாது என்பதற்காக இதை கூறுகிறேன். - ஸ்ம்ரிதி இரானி (மத்திய ஜவுளித்துறை அமைச்சர்)

* சாலைகளில் பேனர் வைக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை மீறி ‘எங்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி தாருங்கள்’ என அ.தி.மு.க. அரசு கோரிக்கை விடுத்துள்ளதன் மூலம், இரு உயிர்கள் பலியானது குறித்து இந்த அரசுக்கு அக்கறை இல்லை என்பது தெளிவாக புலனாகிறது. - டி.கே.எஸ். இளங்கோவன் (ராஜ்யசபா எம்.பி.)

* அ.தி.மு.க.வும், பாரதிய ஜனதாவும் கூட்டணியில் இருக்கின்றன. காங்கிரஸ் இல்லாத பாரதம் அமைய வேண்டும் என்பதை நாங்கள் வெளிப்படையாக கூறி வருகிறோம். கூட்டணியோடு சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பும் இருக்கிறது. அதைப் பேசி முடிவு செய்வோம். தமிழகத்தில் நடக்க உள்ள இரு தொகுதி இடைத்தேர்தல்களிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். - இல.கணேசன் (ராஜ்யசபா எம்.பி.)

* தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முழுமையாக கெட்டுவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் பத்தொன்பது கொலைகள் நடந்துள்ளன. திருச்சியில் தனியார் நகைக்கடையில் பதின்மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ள அடிக்கப்பட்டுள்ளன. இதை விட வேறென்ன உதாரணம் வேண்டும்!? - கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்)

* தமிழகத்தில் பாரதிய ஜனதா ஆட்சி தான் நடக்கிறது என்பதை நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். பா.ஜ. நினைப்பதை எல்லாம் இங்கே செய்கின்றனர். வரவேற்பு பேனர் வைக்க அத்தனை முயற்சியும், முனைப்பும் காட்டுகிறவர்கள், நீட் தேர்வை ரத்து செய்ய இதே முனைப்போடு பாடுபட்டிருந்தால் தமிழகத்தில் பல குழப்பங்கள் இருந்திருக்காது. -கனிமொழி (லோக்சபா எம்.பி.)

* நான் சிறு காமெடி பாத்திரத்தில் எப்போதோ நடித்த படத்தை ‘யோகிபாபு ஹீரோவாக நடித்த படம்’ என்று பொய் சொல்லி வெளியிடுகின்றனர். எனக்கு காமெடி காட்சிகளுக்கான வசனத்தை எஸ்.பி.ராஜ்குமார் எழுதிக் கொடுப்பதாகவும் வதந்தி கிளப்பிவிட்டுள்ளனர். அது உண்மையில்லை. எனக்கு யாரும் காமெடி வசனம் எழுதவில்லை. இயக்குநர்கள் தரும் வசனத்தை என் ஸ்டைலுக்கு மாற்றி பேசுகிறேன். அவ்வளவே! - யோகிபாபு (நடிகர்)