பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து, இன்றுடன் ஒருவாரம் ஆகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், 105 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து விட்டு வெளியேறிய, போட்டியாளர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவர் வீடியோ மற்றும், ட்விட்டர் பதிவுகள் மூலம் தங்களது மனமார்ந்த நன்றிகளை வாக்களித்த மக்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

ஏற்கனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடிய ஆரி, வீடியோ மூலம், பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த போதே தனக்கு உடல் நலம் சரி இல்லை என்றும், விரைவில் உங்களை லைவ் மூலம் சந்திப்பேன் என தெரிவித்திருந்தார். இவரை தொடர்ந்து, பிக்பாஸ் இறுதி சுற்று வரை வந்து வெளியேறிய போட்டியாளரான சோம் சேகர் முதல் முறையாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: உங்கள் அனைவருடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. என்னை இறுதிப் போட்டி வரை கொண்டு சென்றதற்கு மிக மிக நன்றி. அனைவருக்கும் நான் கடமைப்பட்டவனாக இருப்பேன். நான் கடந்த மூன்று, நான்கு நாட்கள் சமூக வலைதளங்களில் வரவில்லை. காரணம் எனக்கு கொஞ்சம் உடல் நலம் சரியில்லாமல் இருந்தது.

தற்போது நான் குருவாயூரில் உள்ளேன். குருவாயூரில் உங்களுக்கும் எனக்கும் சேர்த்து சாமியை வேண்டிக் கொண்டேன். விரைவில் நான் சென்னை வந்த பிறகு உங்களுடன் லைவ்வில் பேசுகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் உங்களுடைய அனைத்து விமர்சனங்களையும் கேள்விகளை நான் பார்த்தேன். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் நான் பதில் சொல்வேன். என்று கூறி இவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலர் உங்களுக்கு என்ன ஆனாது என்று, அவரிடம் தொடர்ந்து அக்கறையோடு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

சோம் சேகர் வெளியிட்ட வீடியோ இதோ...