‘உன்னை இப்பவே நேர்ல பாக்கணும் போல இருக்கு ராசா’ என்று ஒன்று சொல்வார்களே அப்படித்தான் தோன்றுகிறது பத்திரிகையாளர், இயக்குநர் சரவணன் எழுதியிருக்கும்  நடிகர் ஒருவர் குறித்த ஆச்சரியமான பதிவு. அந்தப் பதிவுக்குக் கீழே ‘யார் அந்த மகத்தான நடிகர்? என்று கேள்வி எழுப்பி, சில யூகங்களை தாங்களே எழுதியும் பதிலளித்து வருகிறார்கள் கமெண்டர்கள்.

பிரபல பத்திரிகையாளராக இருந்து ஓய்வு பெற்று, ‘கத்துக்குட்டி’ என்ற ஒரே ஒரு படம் எடுத்து ஓய்வு பெற்று, பின்னர் சசிகலா, தினகரன் அணியினருடன் நெருக்கமாகி, அவ்வப்போது சமூகப் பொறுப்பாளராகவும் முகம் காட்டி வருகிற சரவணன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நடிகர் பற்றி எழுதியுள்ள குறிப்பு அவர் யார் என்று தெரிந்துகொள்ளும் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

சரவணனின் அப்பதிவில்,...கடந்த 10 நாட்களில் நடிகர் ஒருவர், ஒரு விவசாயி மகனின் படிப்பு செலவை ஏற்றார்; வறுமையில் வாடும் கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்திக்கு பண உதவி செய்தார்; பாரம்பரிய நெல் திருவிழாவுக்கு ஒரு லட்சம் வழங்கினார். ஹீரோயிசம் என்பது 50 பேரை அடிப்பது அல்ல; 5 பேருக்காவது கொடுப்பது! என்று ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார்.

அப்பதிவுக்குக் கீழே கமெண்ட் போடும் பலரும், ...விஜய் சேதுபதியா சிவகார்த்திகேயனா, சத்யராஜா என்று அவர்கள் மூவர் பெயரைக் குறிப்பிட்டே கேள்வி கேட்கிறார்கள். இன்னொருவர் அந்த ஹீரோ யாருன்னு தெரியலைன்னா தலையே வெடிச்சுடும்போல இருக்கு சார்’ என்று கமெண்ட் போட்டிருக்கிறார்.