Asianet News TamilAsianet News Tamil

ரஜினியின் பிம்பத்தை உடைக்க சதியா? விஸ்வாசம் படம் தூக்கிப்பிடிக்க காரணம் என்ன?

நன்றாக ஓடும் ஒரு படத்தை குறைத்துக் கூறுவதும், தியேட்டர்களில் கூட்டமே இல்லாத ஒரு படத்தைப் பற்றி ஆஹா ஓஹோ என செய்தி பரப்புவதும் தமிழ் சினிமாவில் மட்டுமே நடக்கும் கேவலம். இந்த கேவலம் இந்த பொங்கல் நாளில் மீண்டும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

Some one Spoil Rajinikanth's mass
Author
Chennai, First Published Jan 13, 2019, 8:45 PM IST

ரஜினிக்கு தமிழக மக்கள் மத்தில் உள்ள மாஸை சிதைக்க ஒரு கூட்டமே வேலை பார்ப்பதாக சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ரஜினியின் பேட்ட படமும், அஜித் நடித்த விஸ்வாசம் படமும் ஜனவரி 10ம் தேதி வெளியாகின. இதில் பேட்ட படத்துக்கு 600+ அரங்குகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் ரிலீஸ் அன்று கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து அரங்குகளிலும் பேட்ட வெளியிடப்பட்டது. விஸ்வாசம் படம் 450 க்கும் அதிகமான அரங்குகளில் வெளியானது.

ரிலீசுக்கு முந்தைய முன்பதிவில் பேட்ட சாதனை படைத்தது. வரும் 18ம் தேதி வரை பேட்ட படத்துக்கு 90 முதல் 100 சதவீத முன்பதிவு உள்ளது. ஆனால் விஸ்வாசம் படத்துக்கு இரண்டாவது நாளே தியேட்டர் கவுன்டர்களில் டிக்கெட் கிடைத்தது.

இதன் காரணமாக விஸ்வாசம் படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டு, அந்த நேரத்தில் பேட்ட திரையிடப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுகிழமையிலும் விஸ்வாசம் படம் காலியாகவே போனது. அடபவது பேட்ட 100 சதவீதம் என்றால், விஸ்வாசம் 60 முதல் 70 சதவீதம்.

இதனால் பேட்ட படத்துக்கு அதிக ஷோக்கள் மற்றும் தியேட்டர்கள் ஒத்துக்கப்படுவதாக க்யூப் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் ரஜினிகாந்தின் பிஆர்ஓ ரியாஸ் அகமது.

இதனை பார்த்து கடுப்பான விஸ்வாசம் வினியோகஸ்தரும், நயன்தாராவின் மானேஜருமான கொட்டபாடி ராஜேஷ், ரியாஸை கண்டிப்பது போல ஒரு ட்வீட் போட்டார். விஸ்வாசம் படத்துக்கு தியேட்டர்கள் குறைக்கப்பட்டதாக க்யூப் நிறுவனமே அறிவித்த பிறகும், அந்த பட விநியோகஸ்தர் ‘அதெல்லாம் கிடையாது… பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் பாருங்க’ என சமாளித்திருந்தார்.

உடனே அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் மோசமான வார்த்திகளில் கமெண்ட் போட்டிருந்தார். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் ரஜினி பிஆர்ஓவுக்கு செருப்படி பதில் என்றெல்லாம் வீடியோவே வெளியிட்டனர்.

உண்மை என்னவென்றால், ‘விஸ்வாசம் படத்துக்கு கூட்டமே இல்லாவிட்டாலும் பரவாயில்லை… ஷோ எண்ணிக்கையை குறைக்கவே கூடாது. குறிப்பாக கிராமப்புறங்களில் விஸ்வாசம் தான் நம்பர் ஒன்” என்று சொல்லவேண்டும் என அதன் விநியோகஸ்தர் கொட்டப்பாடி ராஜேஷ் தியேட்டர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். இதனை பல திரையரங்குகள் வெளிப்படையாகவே புகாராக கூறியுள்ளனர்.

தமிழகம் முழுக்க அனைத்து சென்டர்களிலும் பேட்டயின் ஆதிக்கம் தொடர்கிறது. ஆனால் விஸ்வாசம் படத்திற்கு பல அரங்குகளில் 50% கூட கூட்டம் இல்லை. இதனை ஆதாரப்பூர்வமாக பல அரங்குகளில் இருக்கை விவரங்களை ஸ்க்ரீன் ஷாட்டோடு வெளியிட்டுள்ளனர் பல ரஜினி ரசிகர்கள். ஆனால் இந்த உண்மையை மறைக்க பாக்ஸ் ஆபிஸ் ட்ராக்கர்கள் என சொல்லிக்கொண்டு எந்த ஆதாரமும் இன்றி பொய்யான தகவல்களை பரப்பிவரும் சிலருக்கு தலைக்கு ரூ. 20000 வரை லஞ்சம் கொடுத்து விஸ்வாசம் படக் கலெக்க்ஷனை உயர்த்திக்கூறுமாறு ஏற்பாடு செய்துள்ளனர்.

Some one Spoil Rajinikanth's mass

ரஜினிக்கு தமிழகத்தில் ஆதரவு குறைந்து விட்டது என்ற பிம்பத்தை உருவாக்க திரையுலகை சார்ந்த சிலரே முன்னின்று செய்யும் சதி இது என்று முன்னணி விநியோகஸ்தர்கள், பேட்ட படத்தை வெளியிட்டு வசூலை அள்ளிக்கொண்டிருக்கும் திரையரங்க உரிமையாளர்கள் பலரும் வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

திரையுலகில் என்றோ காணாமல் போயிருக்கவேண்டிய நடிகர் அஜித். அவருக்கு உரிய நேரத்தில் சரியான ஆலோசனை சொல்லி ‘பில்லா’ படத்தை ரீமேக் செய்ய உதவியவர் ரஜினி. அந்த படத்தின் பூஜையில் தொடங்கி வெளியீடு வரை ரஜினியே முன்னின்று நடத்தினார். தமிழகம் முதல்வராக இருந்த கருணாநிதியை எதிர்த்து பேசி, திமுகவினரிடம் சிக்கி சின்னாபின்னமாக இருந்தவரை, ரஜினியே நேரில் தலையிட்டு காப்பாற்றினார். அந்த அஜித் தான் சரியான சந்தர்ப்பம் பார்த்து பேட்ட படத்துடன் தன் படத்தை மோத விட்டு, இப்போது ரஜினியை விட தான் பெரிய ஆள் என்று காட்டும் வேலையில் இறங்கியுள்ளார். ஆனால் ரொம்ப சீக்கிரமே உண்மைகள் வெளியாகி அம்பலப்பட்டு நிற்கிறார்கள் அஜித்தும் அவரை உயர்த்திக்காட்ட முயற்சித்த அவரது ஆதரவாளர்களும் என கூறியுள்ளனர்.

Some one Spoil Rajinikanth's mass

இது ஒருபுறமிருக்க, காலா மற்றும் கபாலி படங்களில் ஒடுக்கப்பட்டவர்களின் குரலா ஒலித்தது ரஜினியின் குரல், பேட்ட படத்துல வேற மாதிரியான கதைக்  களத்தில் மாறிய போதும் கூட பழைய கபாலி காலாவை மனதில் வைத்து,  பேட்ட படத்தை புறக்கணிக்க கிளம்பியிருக்கின்றனர்.  தென் தமிழக தியேட்டர்களில் பேட்ட படத்துக்குச் சரியான ஆதரவு இல்லை. படத்தைப் புறக்கணிக்கச் சொல்லி பல சாதி தரப்புல இருந்தும், வாய்மொழி உத்தரவைக் கொடுத்திருக்காங்க. அதனடிப்படையில் தான், விஸ்வாசம்  படத்தை இந்தளவுக்கு தூக்கிப் பிடிச்சு புரமோட் பண்றது தொடர்ந்து நடந்துக்கிட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios