சின்மயி நல்லவரா? கெட்டவரா? என்பது விவாதம் அல்ல. வைரமுத்து பல இளம்பெண்களை தொடர்ந்து abuse செய்து இருக்கிறார் என்பதே அவரின் குற்றச்சாட்டு. அவர்மாதிரி ஆட்களை மக்கள் தெரிந்து, உணர்ந்து கொள்வதே #metoo என்பதன் நோக்கம்!  என சமூகவளைதளங்களில் #metoo குறித்து கருத்தும் வைரமுத்து பாலியல் சர்ச்சை விவகாரத்திற்கு எதிராக கருத்தும் பதிவிட்டுள்ளனர்.

ஏழுமலை வெங்கடேசன் என்பவர் தனது முகநூல் பதிவில் ; கையை பிடிச்சி, இழுத்தியா,
என்ன கையி பிடிச்சி இழுத்தியா

பின்னணி பாடகி சின்மயி கூறிய பாலியல் புகாருக்கு வைரமுத்து சொல்கிறார்..

''அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.''

வைரமுத்துவின் விளக்கம் மிகப்பெரிய பம்மலாக இருக்கிறது.. அவர் மீதான குற்றச்சாட்டு சாதாரணமானது அல்ல, கேவலமான குற்றச்சாட்டு.

ஒட்டல் அறைக்கு கூப்பிட்டார், அகால வேளைகளில் போன் செய்தார் என்றெல்லாம் சின்மயி சொல்கிறார். டிஜிட்டல் உலகில் பல விஷயங்களை மறைக்கவேமுடியாது. செல்போன் பதிவுகள் போதும், உண்மைகளை இழுத்துவர..

இதுபோன்ற கட்டங்களில், தவறு செய்யாத ஆண் என்றால், மானம் போகிறதே என கடுமையாக கோபம் வரும். ஒன்று திக்குமுக்காட வைக்கும் கேள்விகளால் பதிலடி கொடுப்பார்கள். இல்லையென்றால் சட்டப்படி புகார்தாரர் மீது நடவடிக்கை எடுப்பார்கள்...

ஆனால், அதைவிட்டுவிட்டு, ஒரு கடுமையான பாலியல் குற்றச்சாட்டில் போய், உண்மையை காலம் சொல்லும்.. சேலம் வெல்லம் என்று சொல்வதெல்லாம் வைரமுத்து போன்ற பிரபலத்துக்கு பெரும் இழுக்கே..

கங்காரு படத்திற்காக வைரமுத்து எழுதிய வரிகள் ஏனோ இங்கே ஞாபகத்திற்கு வருகின்றன..

தள்ளி போட காதல் ஒன்னும்
தேர்தல் இல்லை வாடி
தப்பு பண்ணும் சந்தர்ப்பத்தை
தந்து விட்டு போடி


திவ்யா துரைசாமி முகநூல் தனது பதிவில்; #MeToo ஹேஷ்டேக்ல தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி எல்லோரும் வெளிப்படையா பேச தொடங்கியிருக்காங்க.. வாழ்த்துகள்... பாலியல் அத்துமீறல் செய்யும் ஆண்களின் தைரியமே ,மான அவமானத்திற்கு பயந்து ,கண்டிப்பாக பெண்கள் வெளியில் சொல்ல மாட்டார்கள் என்கிற எண்ணம்தான் ,தவறு செய்வதற்கு இன்னும் சாதகமான சூழலாக அமைகிறது... இந்த எண்ணத்தை சுக்கு நூறாக உடைத்தே ஆக வேண்டும்... அதற்கான ஒரு படிதான் #metoo....

ஆனால் பிரபலங்கள் மீது சுமத்தப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சற்று நிதானமாக பார்க்க தோன்றுகிறது.... பிரபலங்கள் என்றால் பாலியல் அத்துமீறல்கள் செய்யலாம் என்றோ அவர்கள் அவ்வாறுலாம் செய்ய மாட்டார்கள் என்றோ சொல்லவில்லை... மாறாக இன்றைக்கு பாலியல் புகார் சொல்லும் நீங்கள் அன்று என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என கேட்க தோன்றுகிறது.... இத்தனை வருடமாக சொல்லாமல் இருந்ததற்கும் ,இன்று சொல்வதற்கும் ஒரே ஒரு காரணம்தானோ என நினைக்க வைக்கிறது..... அதுதான் உங்களுக்கான வாய்ப்பு.. 2015ல சம்பவம் நடந்ததா சொல்றவங்க ,அதன்பிறகு அவரோட வரிகள்ல பாடவே மாட்டேன்னு சொல்லியிருக்கலாமே ??? அதன்பிறகு ஏஆர் &வைரமுத்து காம்போல எத்தனை பாடல்கள் ???

சுச்சி லீக்சில் சின்மயி வீடியோவை சுச்சி வெளியடுவேன்னு சொன்னது உண்மையா பொய்யானு உங்கள் இருவருக்கும் மட்டுமே தெரியும்... அதே போல தான். வைரமுத்து அவர்கள் மேல சின்மயி சுமத்தியிருக்க குற்றச்சாட்டும். வைரமுத்து ஐயாவிற்கு ஆதரவாக பேசவில்லை... ஆனால் பாலியல் புகார் என்றாலே எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஆண்கள் தவறானவர்கள் என்ற முடிவுக்கு வர வேண்டாம் என்று தோன்றுகிறது.!

நடிகை கஸ்தூரியும் தனது பங்கிற்கு ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், வைரமுத்து அவர்களை நோக்கி சின்மயி எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுக்களை பற்றி என் கருத்தை பலரும் கேட்கிறார்கள். வைரமுத்து அவர்களுடன் நான்...   வைரமுத்து அவர்களை நோக்கி சின்மயி எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுக்களை பற்றி என் கருத்தை பலரும் கேட்கிறார்கள். வைரமுத்து அவர்களுடன் நான் பேச கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்திலும் தமிழையும் பெண்ணியத்தையும் மட்டுமே பகிர்ந்துகொண்டார். தவிர, அவரைப்பற்றி பலர் கூற கேள்விப்பட்டுள்ளேன். ஒரு எதிர்மறையான கருத்தும் இதுவரை என் காதுக்கு எட்டியதில்லை. அண்ணாந்து பார்த்த ஒருவர் மீது சரமாரியாக புறப்பட்டு வரும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் எனக்கு எதிர்பாராத அதிர்ச்சியே. ஒப்புக்கொள்கிறேன்.

சின்மயியும் எனக்கு நல்ல தோழியே ஆவார். நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் ஒருங்கே அமைந்த துணிவுள்ள பெண். அவர் முன்னெடுத்துவைக்கும் குற்றச்சாட்டுக்கள் மிகவும் வன்மையானவை. அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தபிறகே சின்மயி பேச தொடங்கியிருப்பார் என்று எதிர்பார்க்கிறேன். 

இந்த சிக்கலான விஷயத்தில் சின்மயி எழுப்பிய குற்றச்சாட்டுக்களுக்கு திரு வைரமுத்து அவர்கள் பதில் சொல்லும்வரை வெறும் பார்வையாளரான நமக்கு அவசரப்பட்டு எந்த தீர்ப்பும் சொல்லும் தகுதியோ உரிமையோ இல்லை என்று கருதுகிறேன். 
It is only right that we wait for the other side to present his version. Any delay or dallying in that will only serve to confirm the allegations against him.


# 2001-06, 2011-16 ல ஜெ ஆட்சி. அப்போ புகார் தெரிவிச்சிருந்தா ஜெ உள்ள தூக்கி வச்சிருக்குமே..சின்மயி மாதிரி ஆளுங்களுக்கு புகார் தெரிவிக்க டிவிட்டர் சப்போர்ட் தேவையா?..டைரக்டா போலீஸ்கிட்ட போயிருந்தா பத்திரிக்கை மூலமா ஊருக்கே தெரிஞ்சிருக்குமே..People would've Volunteered to Name-Shame. 

* சினிமாவைவிட சங்கீத சபாக்கள் ஒர்ஸ்ட்டுங்கறது ஊருக்கே தெரிஞ்ச விஷயம். சின்மயி மேடம் செஞ்சிண்டு இருக்கறது ஸத் காரியம். ஸங்கீதக்காரா போலவே துணிக்கடைக் கெழம் தூர்தர்ஷன் கெழம்னு எல்லா லங்கோடையும் உருவினா பகவான் அருள் சின்மயிக்குப் பரிபூரணமா கிடைக்கும்😂😂😂

சின்மயி பிராமணப் பொண்ணு அதான் இந்த பொய்யான குற்றச்சாட்டு வைரமுத்து பேர்ல சொல்லுதுனு ஒரு க்ரூப் கெளம்புமே கிளம்பிருச்சா? 

கிடக்கிறது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணைல வைங்கிற கதையா இப்ப ஏன், ஆண்டாள் கையைப் பிடிச்சி இழுத்த வைரமுத்து கையைப் பிடிச்சி இழுக்குது சின்மயி😂😂😂 
இப்ப ரெக்கமண்ட் பண்ணி ஞானபீடம் வாங்கிக்குடுக்க, பாவம் கலைஞர்கூட இல்ல, பால் தெளிக்கவெச்சுட்டுப் போய்ட்டாரு

இப்போ சின்மயி, விமலானுலாம் யார்வேனா பேசலாம் ஆனா இதுக்குலாம் விதை நான் போட்டது... ஸ்ரீரெட்டி

உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும் - வைரமுத்து

நீ அறியப்பட்டவன் என்றால் சின்மயி கூட அறியப்பட்டவர் தான்.
சின்மயி குற்றச்சாட்டை போட வக்கில்ல ..இவன் பதிலை மட்டும் போடும் ஊடகங்கள்
பொய்யான குற்றச்சாட்டு என்றால் வழக்கு போடுங்கள்
#வைரமுத்து

நான் நல்லவன்னு சொல்ல வரல,
ஆனா சின்மயி சொல்றத நம்பாதீங்க..
~வைரமுத்து

வைரமுத்து அவ்வளவு கெட்டவராயிருந்தா, சின்மயி அவ்வளவு நல்லவராயிருந்தா, வைரமுத்துவ எதுக்கு சின்மயி தன்  கல்யாணத்துக்கு கூப்பிட்டு அவரு கால்ல வுழுந்து ஆசீர்வாதம் வாங்கணும்?

ஏன்பா கமலு,எல்லாத்துக்கும் முந்திகிட்டு போய் கருத்து சொல்வ,சின்மயி விஷயத்துல எதாவது சொல்றது,

அட என்ன பெருசு விவரம் தெரியாம பேசிகிட்டு,எதாவது கருத்து சொல்ல போயி நாள பின்ன லிஸ்ட்ல உள்ள நம்ம பேரும் வெளிய வந்துடுமோனு கமலு தயங்குறாப்ல,பேச்சுவாக்கா கேளுங்க,பாவம் சொன்னா சொல்லட்டும், 

தேவப்பட்டா மணிக்கணக்கா புகழ்திருக்கு டிவிட்டர்லயே, கால்ல  கூட விழுந்திருக்கு கல்யாண வீடியோல.... சில்ரனு தெரிஞ்சி எதுக்கு மேரேஜ்க்கு கூப்ட்டிச்சு இந்த சின்மயி??? 

சின்மயி குற்றச்சாட்டு உண்மையாய் இருக்கலாம் . ஆனால் எப்படி அவரை திருமணத்திற்கு அழைத்தீர்கள், விருதுகளுக்கு புன்னகையோடு வாழ்த்த முடிந்தது. அப்பெல்லாம் ஏன் அவர் மேல் வெறுப்பு வரவில்லை?? 

இப்படி வலைதளங்களில் வைரமுத்துவின் லீலைகள் குறித்து ஆதரவும் எதிர்ப்பும் குவிந்து வருகிறது.