Social concern a good news in vanamagan Viewer opinion ...
ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியுள்ள வனமகன் படமும், அவரின் முந்தியய படங்களைப் போன்று சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்டிருப்பதால் பாராட்டுகள் குவிகிறது.
விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா சைகல், பிரகாஷ் ராஜ், தம்பி ராமய்யா, வேல ராமமூர்த்தி நடித்துள்ள படம் வனமகன். திங்க் பிக் ஸ்டுடியோ சார்பில் ஏஎல் அழகப்பன் தயாரித்துள்ளார்.
நேற்று இந்தப் படம் உலகெங்கும் வெளியானது. ரசிகர்கள் பெரும் ஆவலுடன் படத்துக்காகக் காத்திருந்து படத்தைப் பார்த்த பலரும் ஜெயம் ரவி - இயக்குநர் விஜய் கூட்டணியிலிருந்து நல்ல படம் வந்துள்ளது என்று பாசிட்டிவாக தெரிவித்துள்ளனர்.
இந்தப் படம் சமூக அக்கறையுடன் ஒரு நல்ல செய்தியோடு வந்திருக்கிறது என்றும் நிச்சயம் அனைவரும் பார்க்கப்பட வேண்டிய படம் என்றும் கமெண்டுகள் தெறிக்கவிட்டுள்ளனர்
ஜெயம் ரவியின் அர்ப்பணிப்பு, விஜய்யின் சிரத்தை இரண்டும் இந்தப் படத்தை தூக்கி நிறுத்தும், வனமகன் படத்தின் ப்ளஸ் நகைச்சுவைக் காட்சிகளை இயக்குநர் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் என்பது படம் பார்த்தவரின் கருத்து.
