பாலிவுட் நடிகைகள் பலர் மிகவும் விலை உயர்ந்த ஷூக்கள், கைப்பைகள், கை கடிகாரங்கள், உள்ளிட்ட பொருட்கள்  பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி ரூபாய் 1.3 லட்சம் மதிப்பிலும், இளையமகள் குஷி ரூபாய் 1.5 லட்சத்திலும் சமீபத்தில் ஷூக்களை அணிந்து பலரை வியக்க வைத்தனர்.

இதே போல் நடிகை பிரியங்கா சோப்ரா,  ரூபாய் 5 லட்சத்திற்கும் மேலான நிறைய கைப்பைகள், கை கடிகாரங்கள் வைத்துள்ளார். 

இவர்களை ஓவர் டேக் செய்யும் விதத்தில், தனுஷ் பட நடிகை சோனம் கபூர்.  ரூபாய் 18 லட்சம் மதிப்புள்ள ஹாண்ட் பேக் உபயோகித்து, ரசிகர்களை வியக்க வைத்துள்ளார். வித விதமான கைப்பைகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டும் இவர், மற்ற நடிகைகளை விட மிகவும் அதிக பலம் செலவு செய்து இந்த ஹாண்ட் பேக் வாங்கியுள்ளார்.

சமீபத்தில் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், என்பவரை திருமணம் செய்துகொண்ட சோனம் கபூர், திருமணத்தை தொடர்ந்தும் திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.