இந்த புகைப்படத்தில் உள்ள பிரபல நடிகை யாருன்னு கண்டுபிடுங்க பார்க்கலாம் ..! 

தமிழ் திரை உலகினர் புன்னகை அரசி என அன்பாக அழைத்துவரும் பிரபல நடிகையான சினேகாவின் சிறுவயது போட்டோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது.

இந்த போட்டோவை பார்க்கும் அவரது ரசிகர்கள் சிறுவயதிலேயே சினேகா எவ்வளவு அழகாக இருக்கிறார் என தங்களது கருத்தை முன்வைத்து வருகின்றனர். நடிகை சினேகா மும்பையில் பிறந்து பின்னர் தமிழகத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வளர்ந்தார்.

1981 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி பிறந்த சினேகா பிரபல மாடலும் கூட.. 2000 ஆண்டு முதல் இன்றுவரை பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2012ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு குழந்தையை பெற்றெடுத்தாதார். 

நடிகை சினேகா என்னவளே, ஆனந்தம், கன்னத்தில் முத்தமிட்டால், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, ஏப்ரல் மாதத்தில், விரும்புகிறேன், வசீகரா, பார்த்திபன் கனவு, போஸ், வசூல்ராஜா எம்பிபிஎஸ், ஆட்டோகிராப் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் ஸ்னேகா. 

இவரின் சிறு வயது போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஆவலாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது