Snehan Talk about Oviya

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் அதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பலர் அமைதிகாக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் கடைசிவரை போராடி பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெல்லவேண்டும் என்று காத்திருந்த சினேகன் மட்டும் தினமும் ஒரு செய்தி வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்து தனக்கென மிக பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்டவர் சினேகன். எப்போதும் அனைவருக்கும் ஆதரவாக இருந்தவர்.

ஓவியா மற்றும் ஆரவ் மருத்துவ முத்த விவகாரத்தில் சினேகனுக்கு பெரும் பங்களிப்பு உள்ளதென்று அனைவரும் அறிந்த ஒன்று தான். அதன் பின்னர் ஓவியாவுக்கு மிகவும் ஆதரவாக அன்பாக இருந்தார் சினேகன்.

சமீபத்தில் ஓவியா குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார், ஓவியா கடுமையான மனவுளைச்சலில் இருந்த சமயத்தில் இருவருமே ஏதோ ஒரு குழப்பத்தில் இருந்தார்கள். தற்போது தெளிவாகி விட்டார்கள் என கூறியுள்ளார்.

மேலும் ஓவியாவிற்காக பல இரவுகள் தூங்காமல் இருந்துள்ளேன், சிறிய சத்தம் கேட்டாலும் உடனே எழுந்து ஓடிப்போய் ஓவியாவின் படுக்கையை தான் பார்ப்பேன். அவ்வளவு ஏன் அவருடைய நிலையை கண்டு சமையலறை கத்தியை கூட இரவில் ஒளித்து வைத்து விட்டுத்தான் தூங்கப்போவேன் என கூறியுள்ளார்.