snehan like mother of big boss participants vaiyapuri emotional speech

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் முதலில் தலைவராக தேர்தெடுக்கப்பட்டவர் பாடலாசிரியர் கவிஞர் சினேகன் தான். அதனால் தான் என்னவோ தற்போது வரை அவர் யார் பக்கமும் சாயாமல் நடுநிலையாக பேசுவார். ஆரம்பத்தில் ஓவியாமீது அவர் கோபத்தை காண்பித்தாலும், ஓவியா மனஅழுத்ததில் இருந்த போது அவருக்கு பக்க பலமாக இருந்தவரும் இவர் தான். இதன் காரணமாக மக்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

இந்நிலையில் கடந்த வாரம், ஓவியாவை தவிர அனைவரும் நாமினேட் செய்யப்படுவதாக பிக் பாஸ் அறிவித்தார். இதனால் இந்த வாரத்தில் யார் எலிமின்ட் செய்யப்படுவார் என்கிற குழப்பம் அனைவரிடமும் உள்ளது.

கவிஞர் சினேகன் இந்த வாரம் நான் தான் எலிமினேட் செய்யப்படுவேன், என ரைசாவிடம் கூற, அதனை ரைசா வையாபுரியிடம் கூறுகிறார். 

இதற்கு வையாபுரி ஒரு வேலை அப்படி கமல் சார் அறிவித்தால், நான் அவருக்கு பதிலாக வெளியேறுவேன் என அவரிடம் கூறவிருப்பதாக தெரிவிக்கிறார். மேலும் அவர் தலை வாரி இருந்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரி, யாராவது பசிக்கிறது என்று கூறினால் அவர் செய்துகொண்டிருக்கும் வேலையை விட்டு விட்டு வந்து சமைத்து போடுவார்.

அவர் தான் பிக் பாஸ் குடும்பத்தை தற்போது வரை நல்ல முறையில் வழிநடத்துகிறார்... நான் ஒரு டம்மி, சினேகன் தான் ஒரு தாய் போல் அனைவரையும் பார்த்துக்கொள்கிறார் என மனம் உவந்து சினேகனை பாராட்டுகிறார் வையாபுரி.