பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளது. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியில் போட்டியாளர்களுக்கு புதிதாக டாஸ்க் எடுக்க வில்லை என்றாலும், உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் அனைவருக்கும் தலைவலியை கொடுக்கும் நோக்கில், பிக்பாஸ்  முதல் சீசன் போட்டியாளர்கள் ஆர்த்தி, சிநேகன், காயத்திரி, சுஜா வருணி, வையாபுரி ஆகியோர்  பிக்பாஸ் வீட்டிற்கு கெஸ்டாக சென்றுள்ளனர்.

இவர்கள் அங்கு ஒரு வார காலம் தங்க உள்ளனர். இவர்கள் வீட்டிற்குள் வந்த முதல் நாளே... எல்லாருமே சமம் தான் யாருக்கும் சிறப்பு சலுகை கிடையாது என கூறி, மும்தாஜுக்கு வைக்கப்பட்ட ஸ்பெஷல் பால், தயிர், போன்ற பொருட்களை அப்புறப்படுத்தினர். ஆனால் இவர்கள் இப்படி செய்ததை சுத்தமாக கண்டுகொள்ள வில்லை  மும்தாஜ். எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால் கண்டிப்பாக இங்கிருந்து கொண்டு செல்லப்படும் உணவுகள் திரும்பவும் வரும் என அசால்ட் செய்தார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில்... மும்தாஜ் தான் செய்த தவறை சிநேகன் சுட்டி காட்டியதால், அசிங்கப்பட்டதை நினைத்து மனம் வருந்தி, கதறி அழுகிறார்... இதனால் ஒரு நிமிடம் அங்கு உள்ளவர்கள் அனைவருமே பயந்து விட்டனர். பின் சிநேகன் மும்தாஜிடம் நான் அனைவரையும் சேர்ந்து தான் கூறினேனே தவிர உங்களை மட்டும் குறிப்பிட்டுப் கூறவில்லை என்று கூறுகிறார். 

பின் தேம்பி தேம்பி அழும் மும்தாஜை ஆசுவாசப்படுத்தி, அவரை தேற்றுகிறார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்... ஒருவரை சமாதானப்படுத்தும் போது அவரை கட்டி பிடித்து ஆறுதல் கூறும் சிநேகன், மும்தாஜ் தோல் மீது கையை போட்டு நாசுக்கா, அவரை கட்டி பிடிக்கலாமா வேண்டாமா என பயந்து பயந்து அவரை சமாதானப்படுத்தினார். 

'கட்டி பிடி' புகழ் பாடல் நடிகையை கட்டிபிடி வைத்தியர் கட்டிபிடிக்க பயந்த அந்த ப்ரோமோ இதோ !