ஏராளமான இந்தி, தெலுங்குப் படங்களில் நடித்திருந்தாலும் கிளாமராக உடை அணிவதில்லை என்பதில் கறாராக இருந்த நடிகை சிநேகா உல்லல் முதல்முறையாக பிகினி உடைக்கு மாறி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

2005ல் ‘நோ டைம் ஃபார் லவ்’ இந்திப்படத்தின் மூலம் சல்மான் கானுக்கு ஜோடியாக அறிமுகமாகி  ஒரே படத்தில் பிரபலமானவர் சிநேகா. பின்னர்  தெலுங்கு மற்றும் கன்னட உலகிலும் படு பிசியாக இருந்தார். 

கிளாமராக ஆடை அணிவது நடிகர்களிடம் அட்ஜஸ்ட் பண்ணிப்போவது போன்றவற்றில் கெடுபிடியாக இருந்ததால் கடந்த மூன்று வருடங்களாகவே படங்கள் எதிலும் கமிட் ஆகாமல் வீட்டில் ரெஸ்ட் எடுத்து வந்தார்.

இந்நிலையில் தனது மனப்போக்கு மாறியிருப்பதை இந்தி மற்றும் தெலுங்கு இண்டஸ்ட்ரிக்கு அறிவிப்பதற்காக மாலத்தீவில் முதல் முறையாக பிகினி உடையில் தான் உல்லாசமாக இருந்த கவர்ச்சிப் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துள்ளார் சிநேகா. சிநேகாவின் மனமாற்றத்தை வரவேற்று பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் அந்தப் படங்களுக்குக் கீழே கமெண்ட் அடித்து வருகிறார்கள்.