sneha prasanna gave 2 lakhs to farmers
டெல்லியில் போராடி வரும் 15 விவசாயிகள் குடும்பத்தினருக்கு பிரசன்னா - சிநேகா தம்பதியினர் தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தனர்.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நதிநீர்களை இணைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

41 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் தேசிய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் போராடி வரும் 15 விவசாயிகள் குடும்பத்தினருக்கு பிரசன்னா - சிநேகா தம்பதியினர் தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தனர்.
இதையடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது :
விவசாயிகளின் போராட்டம் மிகவும் மன வேதனை அளிக்கிறது. விவசாயிகளுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்.
டெல்லியில் போராடிய 10 விவசாயிகள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளோம். இது எங்களால் முடிந்த மிக சிறிய உதவி.

இது கண்டிப்பாக விளம்பரத்திற்காக செய்ய வில்லை. இதைபார்த்து அனைவரும் உதவி செய்ய முன்வருவார்கள். மீடியா மூலம் அனைவருக்கும் சென்று சேர கூடிய வாய்ப்பு உள்ளது.
விவசாயிகளின் எதிர்காலம் கேள்வி குறியாகி உள்ளது. நடிகர் சங்கம் மூலம் தற்போது உதவி செய்ய முடியாது. அதனால்தான் தனிப்பட்ட முறையில் என்னால் எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்வோம்.
நடிகர் சங்கம் எப்போதும் விவசாயிகளின் பின் நிற்கும். உணவளித்த விவாசாயிகளுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்யலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
