snegan is lying guy said by anuya

பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் சுற்று நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இருந்து முதலாவதாக, 'சிவா மனசுல சக்தி' படத்தில் நடித்து பிரபலமான அனுயா வெளியேற்றப்பட்டார். அவரிடம் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமலஹாசன்.

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற 14 நபர்களின் புகைப்படங்களையும் வைத்து இவர்களுக்கு ஏற்ற பெயர் வையுங்கள் என சில பெயர் பொறித்த பலகைகளை அவரிடம் கொடுத்தார்.

இதில் பலருக்கு பொருத்தமான பெயரை வைத்தார் நடிகை அனுயா, அதில் முக்கியமாக, நடிகை காயத்திரியை வில்லி என கூறினார். நமிதாவை நாட்டாமை என்றும், ஆர்த்திக்கு சாப்பாடு ராமன் என்றும் பெயர் வைத்தார்.

அப்போது பிக் பாஸ் குடும்பத்தின் தலைவரான பாடலாசிரியர் சினேகனுக்கு புளுகு மூட்டை என பெயர் வைத்தார்.

கமலஹாசன் ஒரு நிமிடம் வியந்து போய் என்ன காரணத்திற்காக இவருக்கு இந்த பெயர் வைத்தீர்கள் என கேட்டதற்கு.

அனுயா சினேகனின் புகைப்படத்தில் அவருடைய முகத்தை மறைத்து கண்களை மட்டுமே காட்டினார்.

இதன் மூலம் அனுயா என்ன சொல்ல வருகிறார் என குழப்பி இருந்த ரசிகர்களுக்கு, நடிகர் கமலஹாசன் அவருடைய கண் கூட போய் பேசுவதாக அனுயா கூறுவதாக தெரிவித்தார்.