பாண்டவர் பூமி திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகி பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல் எழுதியவர் கவிஞர் சிநேகன். மேலும் 'யோகி', 'உயர்திரு 420' உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்தார் ஆனால் இந்த படங்கள் அவருக்கு வெற்றிப்படங்களாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ்:

இந்நிலையில் கடந்த ஆண்டு உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய சின்னத்திரை நிகழ்ச்சி 'பிக் பாஸ்'. இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும், பின் பலருக்கும் ஃபேவரட் நிகழ்ச்சியாக மாறியது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு விளையாடியவர்களில் ஒருவர் சிநேகன்.  தற்போது திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

பணம் பறிக்கும் முயற்சியில் சிநேகன்:

தற்போது இவர் பேசி வெளியாகியுள்ள ஒரு ஆடியோ சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. கடந்த 12ஆம் தேதி இலங்கையில், வளர்ந்து வரும் இளம் திரைப்படக் கலைஞர்களால் உருவான சாலைப்பூக்கள் திரைப்படம் பிரபல தனியார் திரையரங்கில் வெளியிடப்பட்டது. 

இந்த விழாவில் கவிஞர் சிநேகன், நகைச்சுவை நடிகர் வையாபுரி உள்ளடோர் கலந்துக்கொண்டுள்ளனர்.

ஏமாற்றி விட்டதாக பணம் கேட்கும் சிநேகன்!

தற்போது வெளியாகியுள்ள ஆடியோவில், சிநேகன் சுதர்ஷன் என்பவரிடம் பேசியுள்ளது...  ஒன்று மட்டும் உண்மை IBC, வலம்புரி ஹோட்டல் மற்றும் சாலைபூக்கள் டீம் அனைவரும் சேர்ந்து தங்களை ஏமாற்றியுள்ளனர்.

இதற்கு தன்னுக்கு ஒரு மணி நேரத்திற்குள் பதில் வேண்டும் இல்லையெனில். நான் தமிழ் நாட்டில் இறங்கியதுமே இது குறித்து மீடியாக்களை சந்தித்து பேச வேண்டி இருக்கும். ஒருத்தரையும் விட மாட்டேன், அதே போல் நேற்று தங்களை பற்றி IBC எடுத்த நேர்காணலை அவர்கள் ஒளிபரப்ப கூடாது காரணம் தங்களுக்கு காசு கொடுப்பதாக சொல்லி அவன் ஏகப்பட்ட பணத்தை வாங்கி சென்றதாக வலம்புரி ஓட்டலின் உரிமையாளர் கூறியுள்ளார்.

"எங்களை விற்க உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது, மூன்று பேரும் தனக்கு பதில் சொல்லணும் இல்லையென்றால் நான் சட்ட ரீதியாக கையாள வேண்டி இருக்கும் என்றும் தங்களிடம் எடுத்த இன்டர்வியுவை IBC யில் ஒளிபரப்பினால் இந்திய ரூபாயின் மதிப்பில் 5 லட்சம் கொடுக்க வேண்டும் என சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்றும் யாரையும் விடமாட்டேன் நாறடித்து விடுவேன் என சிநேகன் கூறியுள்ளார் தற்போது இந்த ஆடியோ மிகவும் வைரல் ஆகி வருகிறது.