சின்னத்திரை சிறந்த தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம் டிடி. இவரது நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இவர் தற்போது தனுஷ் இயக்கும் பவர் பாண்டி படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் சுராஜ் ஹீரோயின்களுக்கு, காசு கொடுத்தால் கிளாமராக நடிக்க வேண்டும் என மிக மோசமான கருத்தை கூறி இருந்தார்.

இதற்கு நயன்தாரா, தமன்னா என பல முன்னனி நாயகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதே போல் தொகுப்பாளினி டிடியும் கோபத்துடன் ‘ஹீரோயின் கம்மியா ட்ரெஸ் போட்றது யோசிக்கிறது பதிலா, நல்ல கதையா யோசிங்க சார்’ என கூறியுள்ளார்.

இந்த டிவீட்க்கு பல நெட்டிசன்கள், டிடி நீங்க ஹீரோயின்னே இல்லை அப்பறம் நீங்க ஏன் கோப படுறீங்க என்றும்,

உங்களுடைய ஷோக்களில் நீங்கள் ஏன் அதிக ஆடை குறைப்பு செய்கிறீர்கள் என டிடிகே பல்பு கொடுத்துள்ளனர்.