sk release the first look of rajarankuski

நடிகர் சிவகார்த்திகேயன் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்.

தரணிதரன் இயக்கத்தில் ‘மெட்ரோ’ படப் புகழ் ஷிரிஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘ராஜா ரங்குஸ்கி’.

கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்.

இப்படத்தை பர்மா டாக்கீஸ் மற்றும் வாசன் தயாரிப்பு நிறுவனம் இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு நிறைவுப் பெற்று, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

படத்தில் ஷ்ரிஷ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்தாலே தெரியும்.