Asianet News TamilAsianet News Tamil

'SK 16' படத்தில் எல்லாமே இரண்டு தானா?

சிவகார்த்திகேயன் ஒரு படத்தை நடித்து முடித்ததும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடிக்க துவங்கி விடுகிறார்.  சமீபத்தில் வெளியான 'மிஸ்டர் லோக்கல்' படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், விரைவில் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
 

sk 16 movie latest update
Author
Chennai, First Published May 7, 2019, 6:21 PM IST

சிவகார்த்திகேயன் ஒரு படத்தை நடித்து முடித்ததும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடிக்க துவங்கி விடுகிறார்.  சமீபத்தில் வெளியான 'மிஸ்டர் லோக்கல்' படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், விரைவில் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், உருவாகும் 'SK 16 '  படம் பற்றிய தகவல்களும் வெளியாகி கொண்டிருக்கிறது.

sk 16 movie latest update

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி,  இரண்டு கதாநாயகன், இரண்டு கதாநாயகிகள், மற்றும் இரண்டு காமெடியன்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர்.  

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான 'தாரை தப்பட்டை' படத்தில் முரட்டு வில்லனாக நடித்த ஆர்.கே.சுரேஷ் மற்றும் ஒளிப்பதிவாளரும், 'சதுரங்க வேட்டை',  'மிளகா' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் நட்ராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

sk 16 movie latest update

மேலும் நடிகை அணு இமானுவேல் மற்றும்  ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இரண்டு கதாநாயகிகள் இப்படத்தில் நடிக்க உள்ளனர். அவர்களை தவிர யோகி பாபு, மற்றும் சூரி என இரண்டு காமெடி நடிகர்களும் இப்படத்தில் நடிக்க உள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

sk 16 movie latest update

எல்லாமே இரண்டு இரண்டாக கமிட் ஆகி வருவதால், இப்படத்தில் மிகப்பெரிய நடிகர் பட்டாளமே  இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios