Siyan is also a Sans to dd Gautham Menon invited ...
தமிழ் சினிமாவில் மாதவன் நடித்த நளதமயந்தி, விசில், பைவ் பை ஃபோர் உள்பட ஒரு சில படங்களில் நடித்து வெள்ளித் திரையில் வலம் வந்தவர் நடிகை திவ்யதர்ஷினி (டிடி).
அதன்பிறகு சின்னத் திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த நிலையில் தனுஷ் இயக்கிய ப.பாண்டி படத்தில் நடித்ததன்மூலம் வெள்ளித் திரைக்குள் மீண்டும் நுழைந்தவர் டிடி.
இதனைத் தொடர்ந்து தற்போது கௌதம் மேனன் இயக்கும் “துருவ நட்சத்திரம்” படத்தில் நடிக்க டிடிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படம் பல்கேரியாவில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், டிடி முதன் முறையாக முன்னணி நடிகரின் படத்தில் நடிக்கயிருப்பது குறிப்பிடத்தக்கது.
சியான் விக்ரம் – கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் துருவ நட்சத்திரம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ரித்து வர்மா ஆகியோர் ஹீரோயினாக நடிக்கின்றனர். இந்த கூட்டணியில் பார்த்திபனும் இணைந்துள்ளார்.
மேலும், சிம்ரன், ராதிகா ஆப்தே, சதீஷ், வம்சி, திவ்யதர்ஷினி ஆகியோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
