மாரடைப்பால் நேற்று இரவு துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு கோலிவுட் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

அதே போல் நடிகை ஸ்ரீதேவியுடன் 3 படங்களில் இணைந்து பணியாற்றிய பழம் பெரும் நடிகை சிவகுமார் ஸ்ரீ தேவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் கூறியிருப்பதாவது.... 

குழந்தை நட்சத்திரமாக இருந்து பெரிய ஹீரோ , ஹீரோயினாக தமிழில் நமக்கு தெரிந்த இரண்டு பேர் கமல்ஹாசன் , ஸ்ரீ தேவி. அதிபராசக்தி படத்தில் ஜெயலலிதா அம்மையார் மடியில் முருகர் வேடம் இட்டுக்கொண்டு தவழ்ந்த நடிகை ஸ்ரீ தேவி என்றும் அந்த தருணம் தற்போது வரை இ நன்றாக நினைவிரிக்கிறது என்று கூறியுள்ளார். 

16வயதினிலே மயிலை தமிழ் ரசிகர்கள் யாரும் மறந்திருக்க முடியாது அதன் பிறகு மூன்று முடிச்சு , வறுமையின் நிறம் சிகப்பு என்று பல ஹிட் படங்களில் நடித்தார். 

மேலும் தன்னுடன் ஸ்ரீதேவியும் கவிகுயில் , மச்சான பார்த்திங்களா , சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு ஆகிய மூன்று படங்களில் ஒன்றாக நடித்துள்ளார். ஹிந்தியில் உச்சம் தொட்ட நடிகையான இவர் சிவகாசி பக்கம் தன்னுடைய பூர்வீகத்தை கொண்டிருந்தாலும்.

இவ்வளவு சீக்கிரம் அவரின் வாழ்கை முடியும் என்று யாரும் கற்பனை கூட பண்ணி இருக்க மாட்டார்கள். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும் என கூறியுள்ளார் நடிகர் சிவகுமார்