நடிகர் சிவகுமார் இன்று சென்னையில் அவர் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், தயவு செய்து இளைஞர்கள் அனைவரும் காதல் திருமணம் செய்து கொள்ளுங்கள்.... உங்களை கை எடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

அதே சமயத்தில் பத்திரிகையாளர்களை பார்த்து, காதல் ஜோடிகளை சேர்ப்பதும் நீங்கள் தான் பிரிப்பதும் நீங்கள் தான் என கூறியவர்.
ஜோதிகா மற்றும் சூர்யாவை சேர்த்து வைத்தது நீங்கள்தான். இன்று அவர்கள் மிக சந்தோஷமாக வாழ்கின்றனர்.

இதே போல் அணைத்து இளைஞர்களும் காதல் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும்.
தொடர்ந்து பேசிய அவர், இன்னும் 10 வருடத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் என்பது இருக்காது என தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் சூர்யாவின் காதலுக்கே தடையாக இருந்த இவர் தற்போது காதலை ஆதரித்து பேசிய விஷயம் பத்திரிகையாளர்களையும் சற்று அதிர்ச்சியில் தான் ஆழ்த்தியுள்ளது.
