sivakumar commit love for sujavarunee

'பிளஸ் 2' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுஜா வருணி. இதுவரை 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது, கடந்த வருடம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். 

தற்போது பல திரைப்படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் கமிட் ஆகி, பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இவரும், நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் சிவக்குமாரும், கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாகவும். இவர்களுக்கு திருமண நிச்சயதார்தம் கூட முடிந்து விட்டதாக செய்திகள் பரவியது. மேலும் இவர்கள் இருவரும் இணைந்து திருப்பதியில் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியானது.

இதனால் பலர் இவர்கள் காதலர்கள் என கூறினர். பின் இதுகுறித்து விளக்கம் கொடுத்த நடிகை சுஜா. சிவகுமார் தான் மதிக்கும் மனிதர்களில் ஒருவர் என்றும், அவர் தன்னுடைய சிறந்த நண்பர் என்றும் தெரிவித்தார்.

 இந்த நிலையில் சிவாஜி கணேசனின், பேரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தானும், சுஜா வருணியும் கடந்த 11 ஆண்டுகளாக பழகி வருவதாகவும். தங்களுக்குள் இருப்பது நட்பையும் மீறிய ஒரு பந்தம் என்பதை போல் பதிவிட்டுள்ளார். இது இவர்களுக்குள் இருக்கும் காதலை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது என பலர் கூறி வருகின்றனர்.


Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…