மோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து வரும் 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் பரபரப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சென்னையில் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக மலேசியா செல்லவுள்ளதாகவும், அங்கு 35 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ள நிலையில்.

இந்த படத்தில் அச்சமின்றின் சென்னை 28, போன்று பல படங்களில் நடித்துள்ள நடிகர் விஜய் வசந்த் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் நண்பராக விஜய்வசந்த் நடித்து வருவதாகவும், இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடித்து வரும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ் மற்றும் ரோபோ ஷங்கர் உள்பட பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.