கடந்த 18 ஆம் தேதி, தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பொதுமக்கள், அரசியல் வாதிகள், பிரபலங்கள் என அனைவரும் தங்களுடைய வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் காலை 8 மணிக்கே... வளசரவாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்ட்  தனியார் பள்ளியில், தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார்.

இவருடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத நிலையில், இவரை வாக்களிக்க அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.  மேலும் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த, தேர்தல் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.