sivakarthikeyan velaikaran first look

'தனி ஒருவன்' படத்தின் மெகாஹிட் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் மோகன் ராஜா இயக்கி வரும் திரைப்படம் 'வேலைக்காரன்'.

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார், இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். பெரும்பாலான படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் பஸ்ட் லுக் சில மணிநேரங்களுக்கு முன் வெளியானது.

இதில் சிவகார்த்திகேயன் பார்மலாக வெள்ளைநிறத்தில் ஷார்ட், கருப்பு கலர் பேண்ட், கழுத்தில் ஆபீஸ் ஐடி, டை , ஒரு கையில் ரத்தக்கறை படிந்த அருவாள், மற்றும் மற்றொரு கையில் ஆபீஸ் பேக் வைத்துள்ளார். அவரது பின்னால் ரோடு மற்றும் இடிந்த கட்டிடம் ஒன்றும் கிடக்கிறது.

இந்த பஸ்ட் லுக்கில் சிவகார்த்திகேயன் மிகவும் சிம்பல் அண்ட் ஸ்மார்ட்டாக வருகிறார் ஆனால் இது வரை நயன்தாரா பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.