sivakarthikeyan targets to vijay market

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோகள் இன்று பிற மொழிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தெலுங்கு மற்றும் மலையாளம் தான் இவர்களின் குறிக்கோள் என்று சொல்லலாம்.

தெலுங்கில் அதிக கவனம் செலுத்தும் நடிகர்கள் என்றால் அது கார்த்தி, சூர்யா, விஜய், விஜய் ஆண்டனி மற்றும் விஷால்.

இதில் சூர்யா மற்றும் கார்த்திக்கு மிக பெரிய வரவேற்ப்பு உள்ளது. விஜய் ஆண்டனிக்கு ஒரு படம் மட்டும் தான் கை கொடுத்தது.

விஜய் தெலுங்கில் கொஞ்சம் தற்போது கவனம் செலுத்துகிறார் என்று கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

அதனால் தான் பைரவா படத்தை மிக பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய சொல்லி இருக்கிறாராம். ஆனால் விஜய்க்கு மலையாளத்தில் இருக்கும் மார்கெட் மிக பெரியது. அங்கு இருக்கும் மலையாள படங்கள் வியாபாரத்தை விட இவர் படத்துக்கு வியாபாரம் அதிகம்.

அந்த மார்க்கெட்டில் இப்பொழுது சிவகார்த்திகேயன் அலை வீச ஆரம்பித்துள்ளது. எப்படியாவது மலையாள மார்கெட்டில் ஒரு மிக பெரிய இடத்தை பிடிக்கணும் என்று ஆசைப்பட்டுதான் பகத் பாசில் வேலைக்காரன் என்ற படத்தில் நடிக்க வைத்துள்ளார் என்று கிசுகிசுக்கபடுகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ திரைப்படம் மலையாள வட்டாரத்தில் மிக பெரிய வெற்றியை கொடுத்தும் இதற்கு ஒரு முக்கிய காரணம்.

விஜய்யின் தெலுங்கு ஆசை போல சிவகார்த்திகேயன் மலையாள ஆசை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு வேலை விஜய் மார்கெட் உடைக்க சிவகார்த்திகேயனின் திட்டம் தீட்டியிருக்காரோ?