Prince second Look : பிரின்ஸ் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரில் நடிகை மரியாவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் திருக்குறள் சொல்லிக்கொடுப்பது போல் புகைப்படம் இடம்பெற்று உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது எஸ்.கே.20 திரைப்படம் தயாராகி வருகிறது. பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி வருகிறது.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் கைடாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி இப்படத்திற்கு பிரின்ஸ் என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், பிரின்ஸ் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் நடிகை மரியாவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் திருக்குறள் சொல்லிக்கொடுப்பது போல் உள்ளது.
இந்த போஸ்டருடன் மேலும் ஒரு முக்கிய அப்டேட்டையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாக உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. பிரின்ஸ் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... KamalHaasan : மருதநாயகம், சபாஷ் நாயுடு படங்களின் நிலைமை என்ன... மீண்டும் உயிர்பெறுமா? - மனம்திறந்த கமல்
