DON Review : டாக்டரை போல் டான் ஆகவும் கெத்து காட்டினாரா சிவகார்த்திகேயன்? - டான் படத்தின் டுவிட்டர் விமர்சனம்
DON Review : சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள டான் படத்தின் டுவிட்டர் விமர்சனம்.
டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி உள்ள திரைப்படம் டான். இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
மேலும் சூரி, சிவாங்கி, பால சரவணன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர பாட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இன்று வெளியாகி உள்ள இப்படத்தை காலை முதலே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதிகாலை 4 மணி காட்சிக்கே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடினர்.
இப்படத்தின் முதல் பாதி முடிந்துள்ள நிலையில், அதுகுறித்த விமர்சனங்களும் டுவிட்டரில் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. அதன் தொகுப்பை தற்போது காணலாம்.
அதன்படி நெட்டிசன் ஒருவர், டான் படம் இந்த ஆண்டின் சிறந்த கமர்ஷியல் படமாக உள்ளதாகவும், சிவகார்த்திகேயன் சூப்பர் பார்மில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அனிருத் மறுபடியும் மாஸ் காட்டி உள்ளார் என்றும், இயக்குனர் சிபி முதல் படத்திலேயே ஆடியன்ஸின் பல்ஸை பிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளர்.
மற்றொரு நெட்டிசன் ஒருவர் முதல்பாதி முழுவதும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
டான் படம் இந்த ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் படம் என்று குறிப்பிட்டுள்ள நெட்டிசன் ஒருவர், சிவகார்த்திகேயனின் நடிப்பு அனைவரையும் கவரும் வகையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முதல் பாதியில் காமெடி நன்கு ஒர்க் அவுட் ஆகி உள்ளதாகவும், சிவகார்த்திகேயன் தனி ஆளாக படத்தை திறம்பட கையாண்டுள்ளதாகவும், பள்ளிபருவ காட்சிகள் நன்றாக உள்ளதாகவும் கூறி உள்ளார். எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பும் சிறப்பாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டுவிட்டர் வாயிலாக டான் படத்திற்கு தொடர்ந்து பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால், படக்குழுவும், சிவகார்த்திகேயனின் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... cannes 2022 :லேடி சூப்பர்ஸ்டார்னா சும்மாவா.. கேன்ஸ் திரைப்பட விழாவில் நயன்தாராவுக்கு காத்திருக்கும் ராஜமரியாதை