சிவகார்த்திகேயன் நடிப்பில், சமீபத்தில் வெளியான 'சீமராஜா' மற்றும் 'மிஸ்டர் லோக்கல்' ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்த நிலையில், அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.   

அந்த வகையில் இவர் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும், படத்தின் படபிடிப்பு பாதி முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் பி.மித்திரன் இயக்கத்தில், இவர் நடித்து வரும் 'ஹீரோ' படத்தின் படப்பிடிப்பும் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 'எங்க வீட்டு பிள்ளை' படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அடுத்த படத்திற்கும் தயாராகியுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த மூன்று படங்களைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிப்பில் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட படத்தின் கதையை, தான் முடித்துவிட்டதாக சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கதை ரசிகர்கள் விரும்பும் விதத்தில் திருப்திகரமாக வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இது சிவகார்த்திகேயன் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

View post on Instagram