சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படம் நேற்று மிகவும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது ஆனால் படம் இண்டர்வல் தியேட்டரிலிருந்து வெளியே ஓடிவந்த ரசிகர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

படம் பற்றி அவர் போட்டுள்ள அந்த பதிவில்; ஏற்கனவே இயக்குநர் ராஜேஷின் மூன்று படங்கள் மரண மொக்கையாக அமைந்ததால், சிவகார்திகேயனோடு இடைந்துள்ள இந்த படமாவது கைக்கொடுக்குமா? எனப் பார்த்தால் மொத்தமாக அவுட் , கெத்தான நடிப்புக்கு, ஸ்டைலிஷ் குயின் நயன்தாரா, காமெடிக்கு சதீஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா என ஒரு கூட்டமே இருந்தும் சிரிப்பே இல்லாமல் தியேட்டரே டல்லடிக்கிறது.  சிவகார்த்திகேயன் ஸ்கிரிப்ட் செலக்சன் பத்தி தெரியும், ஆனால் நயன்தாரா எப்படி கதையே இல்லாத இந்த மாதிரியான படத்துல நடிக்க முடிவு பண்ணாங்க?

ஆமாம் என்ன சொல்லி இந்த படத்துல நடிக்க வச்சிருப்பாரு ராஜேஷ்? கதை இல்லைனாலும் திறமையா திரைக்கதைய கொண்டு அருமையா படம் எடுக்கும் சுந்தர்.சி, எஸ்.ஜே.சூர்யா போன்ற இயக்குனர்கள், அட அதை விடுங்க பல படங்களில் கதையை கொஞ்சம் கொஞ்சமாக உருவி பட்டி டிங்கரிங் பார்த்து ஹிட்டு கொடுக்கும் அட்லீ மாதிரி இயக்குனர்கள் மத்தியில எதுக்கு இந்த படத்த எடுத்தாருன்னே தெரியல!! இதையெல்லாம் பாக்குறப்போ நமக்குதான் எதுக்கு இப்படி ஒரு படத்த பாத்தோம்கிற வெறுப்பு வந்துரும். அதுமட்டுமா, ரிமோட் இருந்தா மொத்த படத்தையும் ஒட்டி விட்டுருப்பேன். இதையெல்லாம் விட கொடுமை என்னன்னா? படத்தைப்பார்த்த ரசிகர்கள் பெரும்பாலும் படம் முடியும் முன்பே தியேட்டரை விட்டு வெளியேறிய சம்பவமும் அரங்கேறியுள்ளது. 

நமக்கு வர்றது காமெடி தான், அதையாவது ஒழுங்கா செஞ்சாரா? இல்ல காமெடி நல்லா வர டைரக்டரை செலக் பண்ணாரா? அதான் இல்ல காமெடின்னு ஒரு கூட்டத்தையே தன்னோடு சேர்த்துக்கொண்டும் ராதிகா, நயன்தாரா போன்ற நடிகர்களையும் காமெடி பீஸாக மாற்றியது தான் கொடுமை. அதுல பாருங்க, ஹேய் வாட்ஸ் அப், ஹே பேஸ்புக்ன்னு காமெடி டயலாக்!! கொடும இதெல்லாம் காமெடியா என காண்டாக்க வைக்கிறது.  இப்படி தான் ராமராஜன்,மோகன், ராஜ்கிரண் என ஆரம்பகாலங்களில் நெறைய ஹிட் கொடுத்து ரஜினி கமலை டறியலாக்கினார் ஆனால் கடைசிவரை ஃபீல்டில் தாக்குப் பிடிக்கமுடியாமல் தெறித்து ஓடியது தான் நியாபகம் வருகிறது.