Sivakarthikeyan received the title of Young Super Star

டிவியில் விஜேவாக இருந்து பின்னர் வெள்ளிதிரையில் அடி எடுத்து வைத்து சக்கைப் போடுபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

அவர் தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் “வேலைக்காரன்” என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பாசிட்டிவ், மற்றும் நெகட்டிவ் கருத்துகளை அள்ளியது.

இந்த நிலையில் இன்று தம்பி ராமையாவின் மகன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், “சிவகார்த்திகேயனை "இளம் சூப்பர் ஸ்டார்" என குறிப்பிட்டார்.

ஏற்கனவே 'சூப்பர்ஸ்டார்' பட்டத்தால் பல விஜய், அஜித், தனுஷ், சிம்பு, போன்றோரின், ரசிகர்கள் இடையே சமூக வலைத்தளங்களில் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ள தருவாயில் இந்த பட்டம் என்ன பிரச்சனையைக் கொண்டுவரப்போகுதோ…