சிவகார்த்திகேயன், பரோட்டா சூரி, ராகவா லாரன்ஸஸும், இயக்குநர் ஷங்கர், லிங்குசாமி, கெளதம் வாசுதேவ் மேனன், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோரும் தர்பார் திருவிழாவில் பங்கேற்றனர். 

ஏ.ஆர்.முருகதாஸ் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான பிரம்மாண்ட திரைப்படமான "தர்பார்" இன்று ரிலீஸாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே வெளியாகியுள்ள "தர்பார்" திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நேற்று இரவு முதலே தியேட்டர்கள் முன்பு குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் அமர்களம் செய்தனர். 


சூப்பர் ஸ்டாரின் சாமானிய ரசிகர்கள் மட்டுமல்லாது, திரைப்பிரபலங்களும் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக தியேட்டர்களில் குவிந்தனர். சிவகார்த்திகேயன், பரோட்டா சூரி, ராகவா லாரன்ஸஸும், இயக்குநர் ஷங்கர், லிங்குசாமி, கெளதம் வாசுதேவ் மேனன், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோரும் தர்பார் திருவிழாவில் பங்கேற்றனர். மேலும் தர்பார் படம் எப்படியிருக்கு என்று திரைப்பிரபலங்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

Scroll to load tweet…

சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் தர்பார்ரில் தலைவர் ஒன்மேன் ஷோ, அவரின் எனர்ஜி, ஸ்டைல் எல்லாம் இன்ஸ்பையரிங்காக இருக்கு, படம் வெற்றி பெற சூப்பர் ஸ்டார், ஏ.ஆர்.முருகதாஸ், அனிருத், நயன்தாரா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Scroll to load tweet…

மறுபிறவியில் நம்பிக்கை இருக்கா?, எனக்கு இருக்கு. தியேட்டர்களில் தலைவர் தரிசனம். தலைவர் ரஜினிகாந்த் எங் லுக்கில், எனெர்ஜிடிக்கா இருக்கார். பிரேம் பை பிரேம் கலக்கியிருக்கார். தலைவர் ரசிகர்களுக்கு தர்பார் திருவிழா பரிசு என புகழ்ந்து தள்ளியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். 

Scroll to load tweet…

தலைவர் செம்ம ஸ்டைலா இருக்காரு. படம் மாஸ் என பதிவிட்டுள்ளார் நடிகர் பரோட்டா சூரி. 

Scroll to load tweet…

தர்பார் படம் தனி ரகம், தலைவரைப் பார்ப்பது ஒரு வாவ் தருணம், தலைவர் மிகவும் இளைமையாகவும் ஸ்டைலாகவும் வேற லெவலில் இருக்கார். மகள் சென்டிமெண்ட் மற்றும் சண்டை காட்சிகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.அந்த டுவிட்டர் பதிவு இதோ

Scroll to load tweet…