தம்பி கேரக்டர் நடிக்க கண்டிஷன் போடும் சிவகார்த்திகேயன்.......!!!
சின்ன திரையில் இருந்து வந்து தற்போது விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்ற தமிழ் சினிமாவில் முன்னணி நடிககள் அளவிற்கு உயர்த்து வெற்றிநடைபோட்டு வருகிறார் சிவகார்த்திகேயன்.
இவரது நடிப்பில் வெளியான ரெமோ படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் குறையாமல் கல்லா கட்டி வருகிறது.
இந்த படத்தின் ப்ரோமோஷன்காக சிவகார்த்திகேயன் பல பேட்டிகள் கொடுத்திருக்கிறார்.
அப்போது பிரபல பத்திரிக்கை ஒன்றில் பேசும்போது, ரஜினி, விஜய் மற்றும் அஜித் ஆகியோருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அவர்களுக்கு தம்பியாக கூட நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
அதே போல் இவர்களுடன் மட்டும் தான் தம்பியாக நடிப்பேன் என கண்டிஷன்னாக தெரிவித்துள்ளார்.
அடுத்தபடியாக விஜய் , அஜித், ரஜினி படங்களுக்கு தம்பி கேரக்டர் தேவை பட்டாள் கண்டிப்பாக இயக்குனர்கள் சிவாவை அணுகுவார்கள் என கிசுகிசுக்க படுகிறது.
